ஐபிஎல் 2021 தொடர் 29 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது, இதையடுத்து இந்த தொடரின் எஞ்சிய 31 போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் செப்டம்பர் 19 முதல் துவங்குகிறது. இதையடுத்து நாளை துவங்க இருக்கும் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை அனுபவம் வாய்ந்த எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
![]() |
MS Dhoni | Rohit Sharma via IPL T20 |
ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற டாப் 2 அணிகளான இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது, மைதானத்தில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் என்றால் சமூக வலைதளங்களில் இந்த அணி ரசிகர்களும் கடும் சண்டையில் ஈடுபடுவது இந்த போட்டிக்கு மேலும் சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.
போட்டி விவரம்:
சென்னை V மும்பை, போட்டி 30, இரவு 7.30 மணி, துபாய்.
முன்னோட்டம் :
மும்பை : ரோகித் சர்மா தலைமையிலான நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது, கடைசியாக 2020இல் சாம்பியன் பட்டம் வென்ற அதே துபாயில் மீண்டும் எஞ்சிய 2021 ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது அந்த அணிக்கு சாதகமான அம்சமாகும்.
சென்னை : சென்ற வருடம் துபாயில் களமிறங்கிய சென்னை வரலாற்றிலேயே முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாப தோல்வி அடைந்தது, அதே நாட்டில் மீண்டும் இந்த தொடர் நடைபெறுவது அந்த அணிக்கு லேசான பின்னடைவை கொடுக்கிறது. இருப்பினும் இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்துள்ளது அந்த அணிக்கு பெருத்த நம்பிக்கையைக் கொடுக்கிறது.
புள்ளிவிவரங்கள் :
- வரலாற்றில் இவ்விரு அணிகள் மோதிய 31 போட்டிகளில் மும்பை அதிகபட்சமாக 19 போட்டிகளில் வென்று வலுவான அணியாக உள்ளது.
- சென்னை 12 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது, கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 1 முறை மட்டுமே சென்னை வென்றது, 4 முறை மும்பை வென்று அசத்தியுள்ளது.
போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு நாட்டில் கடந்த வருடம் நடைபெற்ற தொடரில் இவ்விரு அணிகள் மோதிய 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றன.
பிட்ச், வெதர் ரிப்போர்ட் :
போட்டி நாளன்று துபாய் நகரத்தில் மழை பெறுவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லை, பொதுவாகவே துபாய் மைதானம் பேட்டிங்க்கு அதிக சாதகமாக இருக்கும். மேலும் இது அளவில் பெரியது என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள், திறமையான வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் விக்கெட்டுகள் கிடைக்கும்.
- துபாய் மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 156 ஆகும்.
- இந்த மைதானத்தில் 60% போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன எனவே டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது.
உத்தேச அணி :
ருதுராஜ் கைக்வாத், ராபின் உத்தப்பா/பப் டு பிளேஸிஸ், அம்பத்தி ராயுடு, மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன், கீப்பர்), ஷர்துல் தாகூர், தீபக் சஹர், ஜோஷ் ஹெசல்வுட், இம்ரான் தாஹிர்.
மும்பை இந்தியன்ஸ் :
பொதுவாகவே வலுவான அணியாக காணப்படும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா, பாண்டியா சகோதரர்கள், ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிசான், சூரியகுமார் போன்ற இந்திய வீரர்களுடன் கிரன் போலார்ட் குயின்டன் டி காக் டிரென்ட் போல்ட் போன்ற வெளிநாட்டு வீரர்கள் வலு சேர்க்கிறார்கள்.
குயின்டன் டீ காக்(கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், கிரன் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஹர்டிக் பாண்டியா, ஜேம்ஸ் நீசம், ராகுல் சஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா.
Search Tags : IPL 2021 CSK vs MI 2021 Head to Head, Pitch Report, Weather Report, Predicted XI.