டி20 உலககோப்பையை இந்தியாவால் வெல்ல முடியுமா ! 2016க்கு பிந்தைய செயல்பாடுகள்

ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கியுள்ள நிலையில் இந்த தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் சந்திக்க உள்ளது.

Indian Cricket Team Since 2016 T20 World Cup
Team india (Photo : Getty Images)


கடந்த 2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது, இருப்பினும் அதன் பின் நடைபெற்ற 5 உலக கோப்பைகளில் அவர் தலைமையிலான இந்தியா கோப்பையை வெல்ல முடியவில்லை.

கேப்டன் தோனி இல்லை:

இந்த முறை வரலாற்றில் முதல் முறையாக எம்எஸ் தோனி அல்லாமல் ஒரு டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளதால் இந்த முறை இந்தியாவால் கோப்பையை வென்று சாதனை படைக்க முடியுமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ்,, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல அதிரடி வீரர்களை கொண்ட அணிகள் இந்த உலகக்கோப்பை போட்டி போடுவதால் இந்தியாவால் வெல்ல முடியுமா என்ற கேள்விக்கு புள்ளி விவரங்கள் அடிப்படையிலான அலசல் பற்றி பார்ப்போம்:

கடைசியாக ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது, அந்த உலக கோப்பையில் எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா அரையிறுதி வரை சென்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தோல்வியுற்று வெறும் கையுடன் நடையை கட்டியது.

அந்த உலகக் கோப்பைக்கு பின்பு விராட் கோலி தான் இந்தியாவிற்கு 90% சதவீத போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ளார், இதை ஏன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன் என்றால் இந்த உலக கோப்பையிலும் அவர் தலைமையில் கடந்த 4 ஆண்டுகளில் விளையாடிய அதிகப்படியான வீரர்கள்தான் களமிறங்க உள்ளார்கள்.

2016 க்கு பிந்தைய செயல்பாடுகள்:

அந்த வகையில் கடந்த 2016 உலகக் கோப்பைக்கு பின்பு இந்தியா இதுவரை மொத்தம் 72 டி20 போட்டிகளில் பங்கு பெற்றுள்ளது. அவையாவன:

  • வெற்றிகள் - 45
  • தோல்விகள் - 22
  • டை மற்றும் முடிவு இல்லை - 5
  • வெற்றி விகிதம் - 62.50

கடந்த 2016 க்கு பின் இதுவரை இந்தியா 62.5 என்ற சிறப்பான சராசரியில் வெற்றிகளை குவித்துள்ளது ஒரு நல்ல அம்சம் ஆகும்.

தொடர்கள் அடிப்படை:

தொடர்களின் அடிப்படையில் பார்க்கும்போது கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா மொத்தமாக 25 டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றுள்ளது.

  • அதில் 14 தொடர்கள் வெளிநாடுகளிலும் 11 தொடர்கள் இந்திய மண்ணிலும் நடைபெற்றுள்ளன.

அதில் சொந்த மண்ணில் பங்கேற்ற 32 போட்டிகளில் இந்தியா 21 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது, 10 போட்டிகளில் தோல்வி அடைந்தது,ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

வெளிநாடுகளில் வெற்றி:

இந்த காலகட்டங்களில் இந்தியா வெளிநாடுகளில் 45 டி20 போட்டிகளில் பங்கேற்று உள்ளது, அதில் 24 போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று அசத்தியுள்ளது. 12 போட்டிகளில் தோல்வியையும் 2 போட்டிகள் டிராவில் முடிந்தன, 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.

  • குறிப்பாக வரலாற்றில் முதல் முறையாக தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய சவால் மிகுந்த வெளிநாடுகளில் முதல் முறையாக ஒரு டி20 தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 

அணியின் அலசல் :

என்னதான் புள்ளிவிவரங்கள் இருந்தாலும் இந்திய அணியின் தற்போதைய செயல்பாடுதான் உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றும்.

அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது கேப்டன் விராட் கோலி தலைமையில் அணியில் இருக்கும் 70% வீரர்கள் நல்ல பார்மில் உள்ளார்கள், குறிப்பாக சமீபத்தில் இதே துபாய் மண்ணில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடர் அவர்களுக்கு நல்ல பயிற்சி எடுக்கும் ஒரு சிறப்பான தொடராக அமைந்தது.

Photo By Getty Images


பேட்டிங்கில் ரோகித் சர்மா, கே எல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் நல்ல பார்மில் இருக்க பார்ம் இல்லாமல் இருந்த சூர்யகுமார் யாதவ், இஷாந்த் கிசான் ஆகியோரும் கூட கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பார்முக்கு திரும்பினார்கள்.

பினிஷிங் செய்வதற்கு ஹர்திக் பாண்டியாவும், ஜடேஜாவும் இருக்க பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா,முகமது சமி, ரவிச்சந்திரன் அஷ்வின், இளம் வருண் சக்கரவர்த்தி, ராகுல் சஹர் ஆகியோர் உள்ளனர் கை கொடுப்பார்கள் என கண்டிப்பாக நம்பலாம்.

பயிற்சி போட்டிகளில் வெற்றி:

டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக வலுவான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான 2 பயிற்சி போட்டிகளிலுமே இந்த அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டதால் தான் இந்தியா அடுத்தடுத்த 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

போதாக்குறைக்கு சமீபத்தில் 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற எம்எஸ் தோனி இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவது டெக்னிக்கல் விஷயங்களில் அணிக்கு மேலும் வலு சேர்க்கிறது என்றே கூறலாம்.

மொத்தத்தில் 2021 டி20 உலககோப்பையை வென்று 2014க்கு பின் தொடர்ந்து ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் தோற்று வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து விராட்கோலி தலைமையிலான இந்தியா சாதனை படைக்கும் என நம்பலாம்.

Previous Post Next Post

Your Reaction