2021 வருஷமாடா இது ! ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து 3 மோசமான உலகசாதனை

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் இன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்று முடிந்த 3வது போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, இதன் வாயிலாக 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 3 - 0 என முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா ஆஷஸ் 2021/22 கோப்பையை தக்கவைத்துள்ளது.

Photo : Getty images


முன்னதாக நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக துவங்கிய இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஆஸ்திரேலியாவின அதிரடி பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 185 ரன்களுக்கு சுருண்டது, அதிகபட்சமாக ஜோ ரூட் 50 ரன்கள் எடுத்தார், ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் பட் கம்மின்ஸ் மற்றும் நேதன் லையன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

மோசமான பேட்டிங்:

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, அதிகபட்சமாக தொடக்க வீரர் மார்கஸ் ஹரிஷ் 76 ரன்கள் எடுத்தார், இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதை அடுத்து 82 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து மீண்டும் சீட்டுக்கட்டு சரிவது போல தனது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து வெறும் 68 ரன்களுக்குச் சுருண்டு மண்ணைக் கவ்வியது.

மோசமான இங்கிலாந்து:

இந்த படு தோல்வியால் 2021ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து படுமோசமான 3 உலக சாதனைகளைக்கு சொந்தம் ஆகியுள்ளது. அவை பற்றி பார்ப்போம்:

1. அதிக தோல்விகள்:

இந்த தோல்வியுடன் சேர்த்து 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணி 15 போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 9 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது, இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற படுமோசமான உலக சாதனையை வங்கதேசத்துடன் இங்கிலாந்து பகிர்ந்து கொண்டது.

  • வங்கதேசம் - 9 தோல்விகள் (2003)
  • இங்கிலாந்து - 9 தோல்விகள் (2021)*

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு காலண்டர் வருடத்தில் அதிக தோல்விகளை இங்கிலாந்து சந்தித்து அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

  • இதற்கு முன் 1984, 1986, 1993, 2016 ஆகிய ஆண்டுகளில் அதிகபட்சமாக தலா 8 தோல்விகளை மட்டுமே அந்த அணி சந்தித்திருந்தது ஆனால் 2021இல் மட்டும் 9 போது தோல்விகளை பதிவு செய்துள்ளது.

3. அதிக டக் அவுட்:

இந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 5 இங்கிலாந்து வீரர்கள் டக் அவுட் ஆனார்கள், இது மட்டுமல்லாமல் இந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் மொத்தமாக இங்கிலாந்து 54 டக்க ஓட்டுகளை பதிவு செய்துள்ளது.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக டக் அவுட்களை பதிவு செய்த அணி என்ற தனது சாதனையை இங்கிலாந்து மீண்டும் சமன் செய்துள்ளது.

ஒரு காலண்டர் வருடத்தில் அதிக முறை டக் அவுட் ஆன அணி:

  • இங்கிலாந்து - 54 டக் அவுட்கள் (1998)
  • இங்கிலாந்து - 54 டக் அவுட்கள் (2021*)

4. தொடர் தோல்வி:

கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து கடந்த 2011ஆம் ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது, அதன்பின் கடந்த 10 வருடங்களாக களமிறங்கிய 13 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளது.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அதிக போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்த அணி என்ற பரிதாப உலக சாதனையையும் இங்கிலாந்து பெற்றுள்ளது.

Previous Post Next Post

Your Reaction