IND vs SA 2021 : அச்சுறுத்தும் மழை - முதல் டெஸ்ட் முழுமையாக நடைபெறுமா, செஞ்சூரியன் மைதான பிட்ச் - வெதர் ரிப்போர்ட் இதோ

தென்ஆப்பிரிக்கா - இந்திய அணிகள் மோத இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளான டிசம்பர் 26 அன்று பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக துவங்க உள்ளது.

supersport park (photo credits : cricket south africa)


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் இருக்கும் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது.

வெற்றிக்கொடி:

இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் தொடக்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் போராட தயாராக உள்ளனர். 

  • கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் 2 - 1 என தோற்று தொடரை இழந்த இந்தியா அதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் 2 முறை டெஸ்ட் தொடர்களை வென்று சரித்திரம் படைத்துள்ளது, மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2 - 1 என முன்னிலை வகிக்கிறது.

மேலும் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருக்கும் இந்தியாவில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட பல தரமான வீரர்கள் இருப்பதால் இந்த முறை கண்டிப்பாக தென்னாப்பிரிக்காவில் இந்தியாவின் வெற்றி கொடியை பறக்கவிட்டு புதிய சரித்திரம் படைப்பார்கள் என இந்திய ரசிகர்கள் இத்தொடருக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

வெதர் ரிப்போர்ட்:

இந்த போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது, ஏனெனில் போட்டி நடைபெறும் செஞ்சூரியன் நகரில் நாளைய முதல் நாளில் மேக மூட்டத்துடன் காணப்படும் வானத்தில் மதிய நேரத்திற்கு பின் 30 - 50% மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

அதைவிட மோசமாக 2வது நாளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் 2-வது நாள் ஆட்டம் 90% பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது.

அதன்பின் 3 மற்றும் 4வது நாட்களில் மழை சற்று ஓய்ந்து மேகமூட்டத்துடன் கூடிய வானலை நிலவும் என எதிர்பார்க்கப்பட்டாலும் 5வது நாளில் மீண்டும் இடியுடன் கூடிய 90% மழைக்கு வாய்ப்பு அதிகமாக காணப்படுவதால் இந்த போட்டி முழுமையாக நடைபெற்று போட்டியின் முடிவு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்:

இந்த போட்டி நடைபெறும் சூப்பர் ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது, சொல்லப்போனால் போட்டியின் 5வது நாளில் கூட வேகப்பந்து வீச்சு எடுபடும் அளவுக்கு இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகமாக கை கொடுக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.

ஆனால் ஆரம்பகட்டத்தில் இந்த வேகப்பந்து வீச்சை நிதானத்துடன் பொறுமையாக சமாளித்து விட்டால் அதன்பின் மிகவும் எளிதாக பேட்டர்கள் ரனகளை குவிக்கலாம், அத்துடன் இங்கு அவுட் ஃபீல்ட் எனப்படும் வெளிப்புற மைதானம் வேகமாக இருப்பது பேட்டிங் வீரர்களுக்கு சாதகமான அம்சமாகும்.

  • கடைசியாக இந்த மைதானத்தில் நடைபெற்ற 5 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் கோரி 297 ஆகும், இத்துடன் மழைக்கான வாய்ப்பும் இருப்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்வது நல்லது.

மேலும் இங்கு 78% சதவீத விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்துள்ளதால் சுழல் பந்துவீச்சாளர்களின் நிலைமை கொஞ்சம் கடினம் என்றாலும் முழு திறமையை உபயோக படுத்துவர்களுக்கு விக்கெட்டுகள் நிச்சயமாக உள்ளது என்றே கூறலாம்.

Previous Post Next Post

Your Reaction