IND vs SA 1st Test 2021 : தென்ஆப்பிரிக்காவின் கோட்டை, இந்தியாவுக்கு ராசியே இல்லாத செஞ்சூரியன் மைதானம், அதிக ரன்கள் - விக்கெட்கள் - ஒரு பார்வை

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா களமிறங்க இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதியன்று துவங்க உள்ளது.

SuperSport Park, Centurion (Photo : BCCI)


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஓர் அங்கமாக நடைபெறும் இந்தத் தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள செஞ்சூரியன் நகரில் இருக்கும் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

வரலாறு படைக்குமா:

கடந்த 1992 முதல் இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு 7 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க இந்தியா ஒரு முறை கூட வெற்றி பெற முடியவில்லை, கடந்த 2010ஆம் ஆண்டு மட்டும் எம்எஸ் தோனி தலைமையில் அங்கு நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 1 என டிரா செய்தது.

  • எனவே இந்த முறை விராட் கோலி தலைமையிலான இந்தியா வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்குமா என இந்திய ரசிகர்கள் இந்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சூரியன்:

இந்த இந்த தொடரை முன்னிட்டு முதல் போட்டி நடைபெறும் செஞ்சூரியன் பற்றி பார்ப்போம்:

தென்ஆப்பிரிக்காவின் அழகிய நகரமான செஞ்சூரியன் நகரில் இருக்கும் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது, மொத்தம் 22,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்க கூடிய வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட்டிருந்தாலும் இந்த முறை தென் ஆப்பிரிக்கா -  இந்தியா மோதும் இப்போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை

ராசி இல்லாத செஞ்சூரியன்:

இந்த மைதானம் இந்தியாவிற்கு ராசி இல்லாத ஒன்று என்றே கூறலாம் ஏனெனில் இம்மைதானத்தில் 2010 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியா இதுவரை 2 போட்டிகளில் பங்கேற்று உள்ளது.

  • அந்த 2 போட்டிகளிலும் முறையே இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்திலும், 135 ரன்கள் வித்தியாசத்திலும் 2 படுதோல்விகளை சந்தித்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவின் கோட்டை:

மறுபுறம் செஞ்சூரியன் மைதானம் தென்னாப்பிரிக்காவின் கோட்டை என்று அழைக்கலாம் ஏனெனில் கடந்த 1995 முதல் 2020 வரை மைதானத்தில் அந்த அணி இதுவரை மொத்தம் 26 போட்டிகளில் களமிறங்கியுள்ளது.

  • அதில் 21 போட்டிகளில் வெற்றி பெற்று எதிரணிகளுக்கு தோல்வியை பரிசளித்து உள்ளது, 2 போட்டிகளில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது, 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
  • கடைசியாக இங்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா தோற்றது குறிப்பிடத்தக்கது.

அதிக ரன்கள்:

இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த பேட்டராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஹாஷிம் அம்லா 13 போட்டிகளில் 1356 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

  • அதிக சதங்கள் மற்றும் அரை சதங்கள் அடித்த வீரராகவும் ஹாஷிம் அம்லா முறையே 5 சதங்களையும் 8 அரை சதங்களையும் அடித்து முதலிடம் பிடிக்கிறார்.
இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக தற்போதைய கேப்டன் விராட் கோலி ஒரு சதம் உட்பட 158 ரன்களுடன் உள்ளார், இவர் இதற்கு முன் இங்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பங்கேற்ற ஒரு போட்டியில்158 ரன்கள் அடித்துள்ளார்.

  • இம்மைதானத்தில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர் : விராட் கோலி 153 (2018) ஆகும்.
  • அதேபோல் இந்த மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரைத் தவிர எந்த இந்திய வீரரும் சதம் அடித்ததில்லை.

அதிக விக்கெட்கள்:

இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜாம்பவான் டேல் ஸ்டைன் 10 போட்டிகளில் 59 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

அதேபோல் மைதானத்தில் அதிக முறை 1 இன்னிங்ஸ்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களாக டேல் ஸ்டெயின் மற்றும் மகாயா நிடினி ஆகியோர் தலா 4 ஐந்து விக்கெட் ஹால்களுடன் உள்ளனர்.

  • இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலராக இஷாந்த் ஷர்மா 2 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார், இந்த மைதானத்தில் இதுவரை எந்த ஒரு இந்திய பவுலரும் 5 விக்கெட் ஹால் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்ச ஸ்கோர்:

இந்த மைதானத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியா தனது அதிகபட்ச ஸ்கோராக 459 ரன்களை பதிவு செய்துள்ளது. 

Previous Post Next Post

Your Reaction