ICC Women's World Cup 2022 : பாகிஸ்தானுடன் முதல் போட்டி, இந்தியாவின் முழு அட்டவணை வெளியீடு

ஐசிசி மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை வரும் 2022 மார்ச் முதல் நியூசிலாந்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது, முன்னதாக 2021 பிப்ரவரி மாதம் தூங்குவதாக இருந்த இந்த தொடர் 2022 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Photo Credits : Getty Images


வரும் 2022 மார்ச் 4 ஆம் தேதி முதல் நியூசிலாந்தில் துவங்க இருக்கும் இந்த தொடரானது வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பார்மட், அணிகள்:

இந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெற உள்ளது, அதன் பின் நடைபெறும் நாக்அவுட் சுற்று மற்றும் பைனல் உட்பட இந்த உலக கோப்பையில் மொத்தம் 31 போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உட்பட உலகின் டாப் 8 அணிகள் பங்கு பெற உள்ளன, இதில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து முதல் அணியாக தகுதி பெற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் மகளிர் சேம்பியன்ஷிப் வாயிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

  • வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகள் மகளிர் ஒருநாள் தரவரிசை அடிப்படையில் கடைசி 3 இடங்களை பிடித்துள்ளன.
  • லீக் சுற்றில் இந்த 8 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும், இறுதியில் லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்அவுட் சுற்றான அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும், அதில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

முழு அட்டவணை:

இந்த நிலையில் ஐசிசி மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை 2022 தொடரின் முழு அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது, அதன்படி 2022 மார்ச் 4 ஆம் தேதி துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

மைதானங்கள்:

இந்த உலக கோப்பை முழுவதும் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து, கிறிஸ்ட்சர்ச், டுனிடின், ஹமில்டன், வெலிங்டன் மற்றும் தவ்ரங்கா ஆகிய 6 முக்கிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளன.

இந்திய அட்டவணை:

இந்த உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை மார்ச் 6ஆம் தேதி அன்று மவுண்ட் மவுன்கனி மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. பின்னர் மார்ச் 10ஆம் தேதியன்று வலுவான நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஐசிசி மகளிர் உலகக்கோப்பை 2021 இந்திய அணியின் முழு அட்டவணை இதோ:

இந்தியா V பாகிஸ்தான், காலை 6.30 மணி, மார்ச் 6, மவுண்ட் மவுங்கனி.

நியூஸிலாந்து V இந்தியா, காலை 6.30 மணி, மார்ச் 10, ஹமில்டன்.

வெஸ்ட் இண்டீஸ் V இந்தியா, காலை 6.30 மணி, மார்ச் 12, ஹமில்டன்.

இங்கிலாந்து V இந்தியா, மார்ச் 16, காலை 6.30 மணி, மவுண்ட் மௌங்கனி.

இந்தியா V ஆஸ்திரேலியா, காலை 6.30 மணி, மார்ச் 19, ஆக்லாந்து.

இந்தியா V வங்கதேசம், காலை 6.30 மணி, மார்ச் 22, ஹமில்டன்.

இந்தியா V தென்ஆப்பிரிக்கா, காலை 6.30 மணி, மார்ச் 27, க்றிஸ்ட்சர்ச்.

  • இப்போட்டிகள் அனைத்துமே இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

நாக் அவுட் சுற்று:

அரை இறுதி 1, காலை 2.30 மணி, மார்ச் 30, வெலிங்டன்.

அரை இறுதி 2, காலை 6.30 மணி, மார்ச் 31, க்றிஸ்ட்சர்ச்.

பைனல், காலை 6.30 மணி, ஏப்ரல் 3, க்றிஸ்ட்சர்ச்.

Previous Post Next Post

Your Reaction