IPL 2022 Retention : திறமையால் லட்சத்தில் இருந்து கோடிகளை அள்ளிய 5 இளம் இந்திய வீரர்கள்

ஐபிஎல் 2022 தொடரின் மெகா ஏலத்திற்கு முன்பாக ஏற்கனவே உள்ள பழைய 8 அணிகள் தாங்கள் தக்க வைக்கும் விரும்பும் வீரர்களின் பட்டியலை நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டன.

Photo Credits : BCCI/IPL

  • நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 27 வீரர்களை 8 அணிகள் தக்க வைத்தன, இதில் 19 வீரர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர், 4 வீரர்கள் இதற்கு முன்பு இந்தியாவிற்காக விளையாடாத வீரர்கள் ஆவர், 8 வீரர்கள் வெளிநாட்டவர்.
  • இந்த 27 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள 8 அணிகளும் மொத்தம் 297 கோடி ரூபாய்களை நேற்று செலவிட்டன.

ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்த வீரர்கள் மற்றும் அவர்களுக்கு செலவிட்ட தொகை, மீதமுள்ள தொகை போன்ற முழுவிவரங்கள் பற்றி படிக்க👇

IPL 2022 Retained Players List : தக்க வைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்

திறமைக்கு பரிசாக கோடிகள்:

இந்த தக்க வைக்கப்பட்ட வீரர்களில் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி அபாரமாக விளையாடி ஜொலித்த காரணத்தால் அதன் பரிசாக ஐபிஎல் 2022 தொடரில் கோடிகளை அள்ளிய 4 இளம் இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம் வாங்க:

1. வெங்கடேஷ் ஐயர்:

ஐபிஎல் 2021 தொடர் துவங்கியபோது கொல்கத்தா அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் கூட இடம் பெறாத வெங்கடேச ஐயர் துபாயில் நடைபெற்ற 2வது பாகத்தில் அபாரமாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை முன்னேற மிகவும் முக்கிய பங்காற்றினார்.

இத்தனைக்கும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் வெறும் 20 லட்சம் என்ற மிகக் குறைவான தொகையில் ஐபிஎல் 2021 தொடரில் பங்கேற்றார் ஆனால் அந்த தொடரில் 10 போட்டிகளில் பங்கேற்ற அவர் 370 ரன்களும் 3 விக்கெட்டுகளும் எடுத்து ஆல்-ரவுண்டராக அசத்தினார்.

  • இதன் காரணமாக ஐபிஎல் 2022 தொடரில் ரூபாய் 8 கோடிக்கு கொல்கத்தா நிர்வாகம் அவரை தக்கவைத்துள்ளது, இது அவர் கடந்த சீசனில் விளையாடிய 20 லட்சத்தை விட 40 மடங்கு அதிகமாகும்.

2. ருதுராஜ் கைக்வாட்:

ஐபிஎல் 2020 தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வரலாற்றில் பெருத்த அவமானத்தை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த வருடமே கோப்பையை வென்று சாதனை படைத்தது, இதற்கு இளம் வீரர் ருத்ராஜ் கைக்வாட் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று மிக முக்கிய பங்காற்றினார்.

  • இதன் பலனாய் ஐபிஎல் 2022 தொடரில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 8 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளது.

ஐபிஎல் 2020, 2021 தொடர்களில் வெறும் 20 லட்சம் ரூபாய்க்கு விளையாடிய இவர் தனது திறமையால் அடுத்த வருடம் 30 மடங்கு அதிக சம்பளத்துடன் 6 கோடி ரூபாய்களுக்கு விளையாட உள்ளார்.

3. அப்துல் சமட்:

ஐபிஎல் 2021 தொடரில் ஆல்-ரவுண்டராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடிய அப்துல் சமத் அடுத்த சீசனுக்காக 4 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப் பட்டுள்ளார்.

கடந்த சீசனில் இவர் அடிப்படை விலையான வெறும் 20 லட்சம் ரூபாய்க்கு ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார் ஆனால் கடைசி நேரத்தில் அதிரடி பேட்டிங் செய்யக்கூடிய இவர் பந்து வீசும் திறமையும் படைத்துள்ள காரணத்தால் இவரை நம்பி தக்க வைத்துள்ள சன்ரைசர்ஸ் கடந்த சீசனை விட 20 மடங்கு அதிக சம்பளம் கொடுத்து 4 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளது.

4. அர்ஷிதீப் சிங்:

2019 மற்றும் 2020 ஆகிய சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக வெறும் 20 லட்சம் ரூபாய்க்கு விளையாடிய அந்த அணியின் இளம் வீரர் அர்ஷிதீப் சிங் அந்த இரண்டு சீசன்களில் அபாரமாக பந்துவீசினார்.

  • குறிப்பாக கடந்த 2 வருடங்களில் 23 போட்டிகளில் பங்கேற்ற அவர் 30 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், இதில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த அசத்தியுள்ளார்.

அத்துடன் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் காரணத்தாலும் கடந்த சீசனை விட 20 மடங்கு அதிக சம்பளத்துடன் 4 கோடி ரூபாய்க்கு ஐபிஎல் 2022 தொடரில் விளையாட பஞ்சாப் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

5. உம்ரான் மாலிக்:

ஐபிஎல் 2021 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக முதல் முறையாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உம்ரான் மாலிக் வேகப்பந்து வீச்சாளர் முதல் முறையாக களமிறங்கினார், கிடைத்த வாய்ப்பில் அபாரமாக செயல்பட்ட அவர் ஐபிஎல் 2021 தொடரில் அதிவேகமான பந்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.

இதன் காரணமாக விராட் கோலி உள்ளிட்ட பல ஜாம்பவான்களின் பாராட்டையும் பெற்ற இவரை ஐபிஎல் 2022 தொடரில் 4 கோடி ரூபாய்க்கு விளையாட ஹைதராபாத் ஒப்பந்தம் செய்துள்ளது.

  • கடந்த 2021 சீசனில் வெறும் 10 லட்சத்திற்கு விளையாடிய இவர் அடுத்த வருடம் 40 மடங்கு அதிக சம்பளத்துடன் விளையாட உள்ளார்.

Previous Post Next Post

Your Reaction