தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது, இதையடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் ஜோடி இணைந்து 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையான தொடக்கம் கொடுத்தனர்.
Photo Credits : Getty Images |
இதன் காரணமாக முதல் இன்னிங்சில் 327 ரன்கள் எடுத்த இந்தியா 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவை 197 ரன்களுக்குள் சுருட்டி 130 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதை தொடர்ந்து விளையாடிய இந்தியா 2-வது இன்னிங்சில் 174 ரன்கள் எடுக்க 305 என்ற இலக்கை இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா மீண்டும் இந்தியாவின் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 191 ரன்களுக்கு சுருண்டது.
சாதனை பட்டியல்:
1. செஞ்சுரியன் சூப்பர் ஸ்டார்: செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் அடித்த கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் செஞ்சுரியன் மைதானத்தில் சதம் அடித்த முதல் ஆசிய தொடக்க பேட்டர் மற்றும் இந்திய தொடக்க பேட்டர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
செஞ்சூரியன் மைதானத்தில் சதமடித்த தொடக்க வீரர்கள்:
- கிறிஸ் கெயில் : 107, 2004.
- டேவிட் வார்னர் : 114, 2004.
- கேஎல் ராகுல் : 123, 2021.
அத்துடன் இதன் வாயிலாக செஞ்சூரியன் மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த வெளிநாட்டு தொடக்க வீரர், ஆசிய தொடக்க வீரர் மற்றும் இந்திய தொடக்க வீரர் என்ற 3 சாதனைகளையும் தன் வசம் ஆக்கினார்.
2. தென்ஆப்பிரிக்காவில் அபாரம்: அதே போல தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த 2வது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையையும் ராகுல் படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சதமடித்த இந்திய ஓபனிங் வீரர்கள்:
- வாசிம் ஜாபர் : 116 ரன்கள், கேப் டவுன், 2007.
- கேஎல் ராகுல் : 123 ரன்கள், செஞ்சூரியன், 2021*.
மேலும் தென்னாப்பிரிக்க மண்ணில் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் பதிவு செய்த இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையையும் வாசிம் ஜாபரை முந்தி பெற்றுள்ளார்.
3. ஆசியாவுக்கு வெளியே: இந்த சதத்தின் வாயிலாக ஆசியாவுக்கு வெளியே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த 2வது இந்திய ஓபனிங் பேட்டர் என்ற வீரேந்திர ஷேவாக் சாதனையை உடைத்து புதிய சாதனையை ராகுல் படைத்துள்ளார்.
ஆசியாவுக்கு வெளியே அதிக சதங்கள் அடித்த இந்திய ஓப்பனிங் பேட்டர்கள்:
- சுனில் கவாஸ்கர் : 15
- கேஎல் ராகுல் : 5*
- வீரேந்திர சேவாக் : 4
4. 2015 க்கு பின்: கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின் ஆசியாவுக்கு வெளியே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய ஓபனிங் பேட்டர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
- கடந்த 2015 க்கு பின் ஆசியாவுக்கு வெளியே ராகுல் 5 சதங்களை விளாசியுள்ளார், இவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா வெறும் 1 சதம் அடித்துள்ளார்.
- ஷான் மார்ஷ் : 372 பந்துகள், 2004.
- கேஎல் ராகுல் : 334 பந்துகள், 2021*.
- ஜொனதன் ட்ராட் : 329 பந்துகள், 2009.
6. அசத்தல் ஜோடி : இப்போட்டியில் கேஎல் ராகுல் மயங்க் அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் குவித்தது, இதன் வாயிலாக தென்னாப்பிரிக்க மண்ணில் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் ரன்கள் மற்றும் 100+ ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த 3வது இந்திய ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
தென்ஆப்பிரிக்காவில் ஓப்பனிங் சதம் அடித்த இந்திய ஜோடிகள்:
- வாசிம் ஜாபர் - தினேஷ் கார்த்திக் : 153, கேப் டவுன், 2007.
- விரேந்தர் சேவாக் - கவுதம் கம்பீர் : 123, செஞ்சூரியன், 2010.
- ராகுல் - மயங் அகர்வால் : 117, செஞ்சூரியன், 2021*.
7. வரலாற்று ஜோடி: இந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மயங்க் அகர்வால் கேஎல் ராகுல் ஜோடி 100+ ரன்கள் குவித்துள்ளனர், இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆசியாவுக்கு வெளியே ஒரு டெஸ்ட் தொடரை 100+ ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ரன்களுடன் துவக்கிய முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்றையும் இவர்கள் படைத்துள்ளனர்.
இதற்கு முன் கடந்த 1936 ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இதேபோல முதலில் பேட்டிங் செய்து அதிக பட்சமாக விஜய் மெர்சண்ட் - டாட்ராம் ஹிண்டில்கர் ஓப்பனிங் ஜோடி 62 ரன்கள் எடுத்ததே இதற்கு முன் சாதனையாக இருந்தது.
இத்துடன் கேஎல் ராகுல் இதுவரை 6 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார், இதில் 5 சதங்கள் இந்தியாவுக்கு வெளியே அடித்ததுள்ளார், அதிலும் இந்த 5 சதங்களும் 5 வெவ்வேறு நாடுகளில் அடித்துள்ளார் என்பது அவர் ஒரு தனித்துவம் வாய்ந்த வீரர் என்பதை காட்டுகிறது.