Vijay Hazare Trophy 2021 : வீணாய் போனது தினேஷ் கார்த்திக் போராட்ட சதம், பைனலில் ஹிமாச்சல் வென்று சாம்பியன்

இந்தியாவில் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வந்த உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் மொத்தம் 38 அணிகள் பங்கு பெற்றன, அதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு 3 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகள் உட்பட புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து காலிறுதிச் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றது.

Photo Credits : BCCI Domestic


நாக் அவுட் சுற்று:

இதை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி சுற்றில் அண்டை மாநிலமான கர்நாடகத்தை வீழ்த்திய தமிழ்நாடு அரையிறுதி சுற்றில் சவுராஷ்டிராவை வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

  • இதை அடுத்து இமாச்சலப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அணிகள் மோதிய இந்த கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று காலை 9 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது.

தடுமாறிய தமிழகம்:

இதை அடுத்து நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இமாச்சல பிரதேச முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தமிழகத்தின் தொடக்க வீரர்கள் அபாரஜித் 2 ரன்கள், ஜெகதீசன் 9 ரன்கள், சாய் கிசோர் 18, முருகன் அஷ்வின் 7 என அடுத்தடுத்து ஹிமாச்சலின் அதிரடியான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் 40/4 என தமிழ்நாடு தடுமாறியது.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் சக வீரர் பாபா இந்திரஜித் உடன் இணைந்து தமிழ்நாட்டை சரிவில் இருந்து மீட்டெடுக்க தொடங்கினார், முதலில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல அதிரடியாக ரன்கள் குவிக்க தொடங்கியது.

5வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்து தமிழ் நாட்டை காப்பாற்றிய இந்த ஜோடியில் 71 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 80 ரன்கள் எடுத்திருந்தபோது பாபா இந்திரஜித் அவுட்டானார்.

தினேஷ் கார்த்திக் சதம்:

மறுபுறம் தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்த அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் வெறும் 103 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 இமாலய சிக்சர் உட்பட சதம் விளாசி 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இறுதியில் அதிரடி இளம் வீரர் சாருக் கான் தனது பாணியில் வெறும் 21 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 42 ரன்களும் விஜய் சங்கர் 22 ரன்களும் எடுக்க 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு 314 ரன்கள் எடுத்து அசத்தியது.

  • ஹிமாச்சல் சார்பில் பங்கஜ் ஜெய்ஸ்வால் 4 விக்கெட்களும், ரிஷி தவான் 3 விக்கெட்களும் சாய்த்தனர்.

ஹிமாச்சல் வெற்றி:

இதை அடுத்து 115 என்ற இலக்கை துரத்திய ஹிமாச்சல் பிரதேஷ் அணிக்கு தொடக்க வீரர் 21 ரன்களிலும் திக்விஜய் ரங்கி 0 ரன்களில் ஆட்டமிழந்து போதிலும் மறுபுறம் தொடர்ந்து பேட்டிங் செய்து வந்த சுபம் அரோரா 131 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும்  1சிக்சர் உட்பட சதம் விளாசி 136 ரன்கள் விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்து வெற்றியை உறுதி படுத்தினார்.

இவரை அவுட் செய்ய முடியாமல் தமிழக பந்துவீச்சாளர்கள் திணறி கொண்டிருக்க இவருடன் அடுத்த வந்த அமித் குமார் 74 ரன்களும் ரிஷி தவான் வெறும் 23 பந்துகளும் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட 42 ரன்கள் எடுத்ததால் 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் மட்டும் இழந்த இமாச்சலப்பிரதேசம் 299 ரன்கள் எடுத்து வி ஜெயதேவன் முறைப்படி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் வாயிலாக வரலாற்றில் முதல் முறையாக விஜய் ஹசாரே கோப்பையை வென்று முதல் முறையாக இமாச்சல பிரதேசம் அணி சாம்பியன் பட்டம் வென்றது, மறுபுறம் இந்த தொடர் முழுக்க லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் இறுதி போட்டியில் வெற்றி பெறத் தவறிய தமிழ்நாடு 6வது முறையாக இந்த கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

Previous Post Next Post

Your Reaction