ஆஹா சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட ஜாம்பவான்கள் மீண்டும் விளையாடும் கிரிக்கெட் தொடர் ! எங்கே, எப்போது - முழு விவரம் இதோ

ஓமன் நாட்டில் வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் "லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்" என்ற பெயரில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பல முன்னணி வீரர்கள் பங்குபெறும் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்க உள்ளது.

Photo Credits : Getty Images


ஓமனில் உள்ள அல் அம்ரேட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த கிரிக்கெட் தொடரில் மொத்தம் 3 அணிகள் பங்கு பெற உள்ளன.

சேவாக், யுவி:

இந்த தொடரில் இந்திய மகாராஜா என பெயரிடப்பட்டுள்ள அணியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்ற முக்கியமான நட்சத்திர வீரர்கள் விளையாட உள்ளனர்.

இந்தியா தவிர ஆசிய கண்டத்தின் எஞ்சிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்களை கொண்ட ஆசிய அணி மற்றும் உலகின் இதர வீரர்கள் அடங்கிய ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட் அணி என மொத்தம் இந்த தொடரில் 3 அணிகள் பங்கு பெறுகின்றன.

இந்த தொடரில் இந்திய மகாராஜா அணி சார்பில் வீரேந்திர சேவாக் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், யூசுப் பதான், ஆர் பி சிங், நமன் ஓஜா, பிராகியன் ஓஜா, வேணுகோபால் ராவ், முனாஃப் படேல், சஞ்சய் பங்கர், நயன் மோங்கியா, அமித் பண்டாரி போன்ற வீரர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் பத்ரிநாத் மற்றும் ஹேமங் பதானி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஆசிய அணி :

அதேபோல் ஆசிய அணியில் பாகிஸ்தானை சேர்ந்த சாகித் அப்ரிடி, சோயிப் அக்தர், முரளிதரன் போன்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கு பெற உள்ளனர்.

ஆசிய லயன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த அணியில் சாகித் அப்ரிடி, சோயப் அக்தர், முரளிதரன், சமிந்தா வாஸ், சனத் ஜெயசூர்யா, கம்ரன் அக்மல்,  ரொமேஷ் குழுவிர்தனா, திலகரத்ன டில்சான், அசார் மகமூத், மிஸ்பா உல் ஹக், முகமது ஹபீஸ், சோயப் மாலிக், உபுல் தரங்கா, உமர் குல், முகமது யூசுப், அஸ்கர் ஆப்கான் ஆகிய நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த தொடரில் பங்கேற்க உள்ள ரெஸ்ட் ஆஃப் வேர்ல்ட் அணில் பங்குபெரும் ஜாம்பவான் வீரர்களின் பெயர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, அத்துடன் இந்த தொடரின் முழு அட்டவணையும் விரைவில் வெளியாகும் உள்ளது.

Previous Post Next Post

Your Reaction