தனது ஆல் டைம் லெவனை வெளியிட்ட ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ! டிராவிட், தோனி, கோலிக்கு இடம் இல்லை

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களை கொண்டு தங்களது கனவு கிரிக்கெட் அணியை அவ்வப்போது முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களும் கிரிக்கெட் வல்லுனர்களும் ரசிகர்களும் தேர்வு செய்வது வழக்கமாகும், அந்த வகையில் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ஆல் டைம் கனவு அணியை தேர்வு செய்துள்ளார்.

Photo Credits : Getty Images

.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங் துறையில் ஏறக்குறைய அனைத்து சாதனைகளையும் தன்வசம் வைத்துள்ள ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது கனவு அணியில் முதலில் தன்னையே தேர்வு செய்யவில்லை.

டிராவிட், தோனி இல்லை:

அதேபோல் இதில் மிகச் சிறந்த சில ஜாம்பவான் வீரர்களையும் அவர் தேர்வு செய்யவில்லை, அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகளை சந்தித்து கிரிக்கெட்டின் தூண் என்று அழைக்கப்படும் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை அவர் தேர்வு செய்யவில்லை.

அதேபோல் இந்தியா கண்ட மகத்தான விக்கெட் கீப்பர் பேட்டர் மற்றும் கேப்டனான எம்எஸ் தோனியையும் அவர் எடுக்கவில்லை, மேலும் நவீன கிரிக்கெட்டில் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலியின் பக்கமும் அவரின் பார்வை செல்லவில்லை.

கனவு அணி:

அவர் தேர்வு செய்துள்ள கனவு அணியில் உலகிலேயே 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை முதல் முறையாக கடந்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்டர்களின் தலையெழுத்தை மாற்றிய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் ஆகியோர் தொடக்க வீரர்களாக இடம் பிடிக்கின்றனர்.

பிரைன் லாரா, விவ் ரிச்சர்ட்ஸ், ஜேக் காலிஸ் போன்ற வெளிநாட்டு ஜாம்பவான்கள் மிடில் ஆடர் வரிசையில் இடம்பெற அவர்களுடன் சௌரவ் கங்குலியையும் அவர் தேர்வு செய்துள்ளார், விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் அதிரடி நாயகன் ஆடம் கில்கிறிஸ்ட் இடம் பிடிக்கிறார்.

பந்து வீச்சாளர்களில் இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், ஷேன் வார்னே, கிளென் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்களை அவர் தனது அணியில் தேர்வு செய்துள்ளார், 800 விக்கெட்டுகள் வீழ்த்தி உலக சாதனை படைத்த இலங்கையின் முத்தையா முரளிதரனை அவர் தேர்வு செய்யாதது அதிகமாகும்.

சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் கனவு அணி இதோ:

விரேந்தர் சேவாக், சுனில் கவாஸ்கர், பிரையன் லாரா, விவ் ரிச்சர்ட்ஸ், ஜேக் காலிஸ், சௌரவ் கங்குலி, அடம் கில்கிறிஸ்ட் (கீப்பர்), ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், ஹர்பஜன் சிங், கிளென் மெக்ராத்.

Previous Post Next Post

Your Reaction