ஐபிஎல் 2023 மினி ஏலம் : சென்னை அணி தக்க வைத்துள்ள வீரர்கள், விடுவித்த வீரர்கள் - கையிருப்பு தொகை

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 2023 மார்ச் - மே மாதம் வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சி நகரில் மினி ஏலமாக நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் விடுவித்த மற்றும் தக்க வைத்த வீரர்களை நவம்பர் 15க்குள் சமர்ப்பிக்குமாறு பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில் 4 கோப்பைகளை வென்று இரண்டாவது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தல தோனியை முதல் வீரராக தக்க வைத்துள்ளது. அத்துடன் சண்டை என்று வதந்திகள் வந்த ரவீந்திர ஜடேஜாவை முக்கிய வீரராக தக்க வைத்துள்ள அந்த அணி காலம் காலமாக சிறப்பாக செயல்பட்டு வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ட்வயன் ப்ராவோவை விடுவித்துள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Photo  : BCCI/IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்: எம்எஸ் தோனி (கேப்டன்), டேவோன் கோன்வே, ருதுராஜ் கைக்வாட், அம்பத்தி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ட்வைன் பிரிடோரிஸ், மிட்செல் சாட்னெர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, மதீஷா பதிரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சஹர், பிரஷாந்த் சோலங்கி, மஹீஸ் தீக்ஷனா.


சென்னை விடுவித்துள்ள வீரர்களின் பட்டியல்: ட்வயன் ப்ராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன்


தற்போது இவர்களை அணியிலிருந்து விடுவித்ததால் சென்னை அணியில் அதிகபட்சமாக 7 வீரர்களின் இடம் காலியாக உள்ளது அதில் அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்களை வாங்கலாம். அவர்களை வாங்குவதற்காக வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் ஏலத்தில் 20.45 கோடிகளுடன் சென்னை அணி களமிறங்க தயாராகியுள்ளது.

Previous Post Next Post

Your Reaction