ஐபிஎல் 2023 மினி ஏலம் : மும்பை அணி தக்க வைத்துள்ள வீரர்கள், விடுவித்த வீரர்கள் - கையிருப்பு தொகை

உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் மினி அளவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணி நிர்வாகமும் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டது. அந்த வகையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்தததால் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது.

Photo : BCCI/IPL

குறிப்பாக காலம் காலமாக அதிரடியாக செயல்பட்டு 5 கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றிய கைரன் பொல்லார்ட் இந்த வருடம் சுமாராக செயல்பட்டதால் விடுவித்துள்ள மும்பை அணி நிர்வாகம் அவரது அனுபவத்தை பயன்படுத்தும் வகையில் பேட்டிங் பயிற்சியாளராக அறிவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்:

ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், ரமந்தீப் சிங், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், ட்ரிஸ்தன் ஸ்டப்ஸ், தேவால்டு ப்ரேவிஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், குமார் கார்த்திகேயே, ரித்திக் ஷாக்கீன் , ஜேசன் பெஹரேண்டாஃப், ஆகாஷ் மத்வால்

மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்துள்ள வீரர்களின் பட்டியல்: கைரன் பொல்லார்ட், அன்மோல்ப்ரீத் சிங், ஆர்யன் ஜுயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், பாபின் ஆலன், ஜெயதேவ் உனட்கட், மயங் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் பௌதீ, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்

இதனால் அந்த அணியில் தற்போது அதிகபட்சமாக 9 வீரர்களுக்கான இடம் காலியாக உள்ளது. அதில் அதிகபட்சமாக 3 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும். அந்த வீரர்களை வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் மினி ஏலத்தில் வாங்குவதற்காக அந்த அணியிடம் தற்போது 20.55 கோடிகள் ஏலத் தொகை கைவசம் உள்ளது.

Previous Post Next Post

Your Reaction