ஆசிய கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் 2023 ஆசிய கோப்பை ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கி பெரும்பாலும் இலங்கையில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலக கோப்பைக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாள் ஆகிய ஆசிய கண்டத்தைச் சேர்ந்த டாப் 6 அணிகள் தயாராகும் வகையில் நடக்கும் இத்தொடர் ஒருநாள் போட்டிகளாக நடைபெற உள்ளது. இந்த தொடரிலிருந்து தான் ஆசிய அணிகள் உலகக் கோப்பையில் விளையாடப் போகும் தங்களுடைய இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்ய உள்ளனர்.
Photo Credit : Asian Cricket Council |
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரில் களமிறங்குவதற்காக ரோகித் சர்மா தலைமையில் 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணி வீரர்கள் பட்டியல் இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்டிக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கீப்பர்), இஷான் கிசான், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஷார்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி
நேரடி ஒளிபரப்பு: இந்த தொடரை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடியாக பார்க்கலாம். அதே போல டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ரசிகர்கள் இந்தியாவின் போட்டிகளை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பார்க்க முடியும். மேலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக கட்டணமின்றி இலவசமாக பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.