T20 World Cup 2021 : இந்திய அணி அறிவிப்பு - ஆலோசகராக எம்எஸ் தோனி

ஐசிசி டி20 உலக கோப்பை 2021 கிரிக்கெட் தொடர் 7வது முறையாக வரும் அக்டோபர் 17-ஆம் தேதி துவங்குகிறது, முன்னதாக இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த இந்த தொடர் ஐக்கிய அரபு மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு மாற்றப்பட்ட போதிலும் இந்த தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது உரிமையில் நடத்துகிறது.

T20 World Cup | Team India (Getty Images)


இந்தியா மற்றும் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் உட்பட உலகின் 16 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன, இந்த உலகக் கோப்பையில் குரூப் 2வது பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வரும் அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கான முழு அட்டவணையையும் ஏற்கனவே ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஐசிசி டி20 உலககோப்பை 2021 : முழு அட்டவணை

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த உலக கோப்பையில் பங்கேற்கும் தங்களது அணி வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளன, அந்த வரிசையில் விராட்கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது.

எம்எஸ் தோனி : அதில் முதலாவதாக 2007 முதல் 2016 வரை வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 6 டி20 உலக கோப்பைகளுக்கும் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்ட முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்எஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறவிருக்கும் எஞ்சிய ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பின் அவர் இந்திய அணியுடன் இணைந்து இந்த உலகக் கோப்பையில் பணியாற்ற உள்ளார்.

ரவிச்சந்திரன் அஷ்வின் : இந்த அணியில் 2வது ஆச்சரியம் என்னவெனில் தமிழகத்தைச் சேர்ந்த சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், இவர் கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவிற்காக ஒரு டி20 போட்டியில் விளையாடினார்.

இருப்பினும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்த அவருக்கு 4 வருடங்கள் கழித்து அதுவும் உலக கோப்பை இந்திய அணியில் இடம் கிடைத்தது அனைத்து இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.


நீக்கப்பட்ட சஹால் : அஷ்வினுக்கு பின் புதிய சுழல் பந்துவீச்சு ஜோடியாக உருவெடுத்த யூஸ்வென்ற சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்படாதது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது, இந்த இருவருமே கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான பார்மில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹர்டிக் பாண்டியா : அதேபோல் ஆல்ரவுண்டர் வரிசையில் சமீப காலமாக பந்துவீசாமல் இருந்து வந்த ஹர்திக் பாண்டியா இந்த உலக கோப்பையில் பேட்டிங் மற்றும் பவுலின் இரண்டுமே செய்வார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு இளம் சுழல்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, ராகுல் சாஹர், இஷான் கிசான், அக்சர் படேல் போன்ற இளம் வீரர்களுக்கு உலககோப்பை இந்திய அணியில் முதல் முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

2021 ஐசிசி டி20 உலககோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி இதோ: 

Photo By BCCI


விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (கீப்பர்), ஹர்டிக் பாண்டியா, ஜஸ்பிர்த் பும்ரா,ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முஹம்மது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், இஷான் கிசான், ராகுல் சாஹர், வருண் சக்ரவர்த்தி.


ரிசர்வ் வீரர்கள் : ஷ்ரேயஸ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர்.

Previous Post Next Post

Your Reaction